மரிக்கார், சுசில் மற்றும் ஹிருணிக்காவிற்கு கொழும்பில் அதிக விருப்பு வாக்குகள்; (விருப்பு வாக்குகள் முழுவிபரம்)

மரிக்கார், சுசில் மற்றும் ஹிருணிக்காவிற்கு கொழும்பில் அதிக விருப்பு வாக்குகள்; (விருப்பு வாக்குகள் முழுவிபரம்)

மரிக்கார், சுசில் மற்றும் ஹிருணிக்காவிற்கு கொழும்பில் அதிக விருப்பு வாக்குகள்; (விருப்பு வாக்குகள் முழுவிபரம்)

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 9:35 am

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற ஆறு மாவட்டங்களுக்குமான  விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமசந்திர 1,39,034 வாக்குகளைப் பெற்று முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட உதய கம்மன்பில 1,15,638 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், உப்பாலி கொடிகார 47,822 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ரொஜர் செனவிரத்ன 44,011 வாக்குகளையும்  மல்ஷா குமாரதுங்க 43,324 விருப்பு வாக்குகளையும் பெற்று மேல் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார் 67,243 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

மஞ்ஜு ஸ்ரீ அரங்கல 45,654 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட கே.டி.லால்காந்த 45,460 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுசில் கிந்தெல்பிட்டிய 32,918 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் போட்டியிட்ட மனோ கணேசன் அந்த கட்சி சார்பில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று மேல் மாகாணத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி 44,156 வாக்குகளைப் பெற்றதுடன், 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பிரசன்ன ரணதுங்க, 2,49,678 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்திலுள்ளார்.

கூட்டமைபின் நிமல் லன்சா 1,6,661 விருப்பு வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும்,  சஹன் பிரதீப் 59,892 விருப்பு வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹர்ஷன ராஜகருணா கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு 51,18 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காவிந்த ஹேஷான் 41,654 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எட்வட் குணசேகர 29,944 விருப்பு வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சுசார தினால் 37,598 விருப்பு வாக்குகளைப் பெற்று இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாண சபைக்கு களுத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட செனல் வெல்கம ஒரு இலட்சத்து 15,385  விருப்பு வாக்குளைப் பெற்று முதலாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஷான் விஜேலால் டி சில்வா 95,860 வாக்குகளைப் பெற்று முதலிடத்திலுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பசந்த யாப்பா அபேவர்தன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அவர் 76,870 விருப்பு வாக்குளைப் பெற்று முன்னிலை வகிப்பதுடன், சந்திம ராசபுத்திர 70,509 வாக்குளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

47,90 வாக்குகளைப் பெற்ற சரத் யாப்பா அபேவர்தன மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 27,930 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்டவர்களுள் ஜினதாஸ கித்துல்கொட 6,173 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளதுடன் 6,690 விருப்பு வாக்குளைப் பெற்றுக்கொண்ட ரஞ்சித் முனசிங்க தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்ட டி.வி உபுல் 64,995 விருப்பு வாக்குளைப் பெற்று அந்த மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

எம்.கே கசுன் 55,881 விருப்பு வாக்குகளைப் பெற்று இரணடாம் இடத்தை கைப்பற்றியுள்ளதோடு 34,591 விருப்பு வாக்குகளைப் பெற்ற அஜித் ராஜபக்ஸ மூன்றாவது இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

தென் மாகாண சபைக்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் ஏ. தென்னகோன் நிலமே 28,825 விருப்பு வாக்குளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்ட நிஹால் கலப்பத்தி 11,957 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தையும்  6,177 விருப்பு வாக்குகளைப் பெற்ற அதுல வெதகொடஹேவகே இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்