பூமி வெப்பமடைவதால் பாரிய விளைவுகள் ஏற்படும்; ஐ.நா அறிக்கை எச்சரிக்கை

பூமி வெப்பமடைவதால் பாரிய விளைவுகள் ஏற்படும்; ஐ.நா அறிக்கை எச்சரிக்கை

பூமி வெப்பமடைவதால் பாரிய விளைவுகள் ஏற்படும்; ஐ.நா அறிக்கை எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 6:30 pm

பூமி வெப்படைவதன் தாக்கங்கள் மாற்ற முடியாத, பரந்த அளவில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் தொடர்பான விரிவான அறிக்கையொன்றை ஜப்பானில் நடைபெற்ற சந்திப்பில் விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கான ஆதாரங்களை ஐ.நாவின் காலநிலை தொடர்பான குழுவிலுள்ள உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர்.

தற்போது காலநிலை மாற்றத்தின் சுமையை இயற்கை கட்டமைப்புக்கள் தாங்கி கொண்டிருக்கின்ற போதிலும், மனிதர்கள் மீதான பாதிப்புக்கள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக மனிதனின் சுகாதாரம், வீடுகள், உணவு, மற்றும் பாதுகாப்பு போன்ற அனைத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுள் சபை சுட்டிகாட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்