நாடு திரும்பினர் ஸ்பெய்ன் ஊடகவியலாளர்கள்

நாடு திரும்பினர் ஸ்பெய்ன் ஊடகவியலாளர்கள்

நாடு திரும்பினர் ஸ்பெய்ன் ஊடகவியலாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 6:02 pm

சிரியாவில் பணயக் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட ஸ்பெய்ன் ஊடகவிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த இருவரும் ஆறு மாதங்களாக பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

விடுதலை செய்யப்பட்ட ஊடகவிலாளர்கள் இருவரும் துருக்கி இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

சிரியக் கிளர்ச்சியாளர்கள் பல ஊடகவிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை ஊடகவியலாளர்களை கடத்துவதை நிறுத்துமாறும், தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் சிரிய கிளர்ச்சிக் குழுக்களுக்கு சர்வதேச ரீதியாகவுள்ள 13 செய்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்