திரைப்படமாகிறது ரஜினியின் வாழ்க்கை; நாயகனாக நடிக்கிறார் ஆதித்யா

திரைப்படமாகிறது ரஜினியின் வாழ்க்கை; நாயகனாக நடிக்கிறார் ஆதித்யா

திரைப்படமாகிறது ரஜினியின் வாழ்க்கை; நாயகனாக நடிக்கிறார் ஆதித்யா

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 4:55 pm

பொலிவுட்டில் சில சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர் பைசல் சைப். இவர் தற்போது ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் எடுக்க உள்ளார்.

தமிழில் ‘நானே ரஜினிகாந்த்’, இந்தியில் ‘மை ஹோ ரஜினிகாந்த்’ என்ற பெயரில் உருவாக உள்ளதாம்.

ரஜினி தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக தொடங்கியது முதல் சினிமாவில் சாதித்து ஆன்மீகத்தில் ஈடுபட்டது வரை அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறது.

இப்படத்தில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் என்பவர் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர், தமிழில் பில்லா, சிங்கம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த வாய்ப்பினை பற்றி ஆதித்யா மேனன் கூறுகையில், ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன் என்றார்.

படக்குழுவினர் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்