தந்தை மீது கொண்டிருந்த அன்பினாலேயே எனக்கு வாக்குகள் கிடைத்தன – ஹிருணிகா (Exclusive Interview)

தந்தை மீது கொண்டிருந்த அன்பினாலேயே எனக்கு வாக்குகள் கிடைத்தன – ஹிருணிகா (Exclusive Interview)

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 9:33 pm

சமூகம், சமயம் உட்பட அனைத்து துறைகளிலும் முன்நிற்கும் சமுதாயத்தை உருவாக்குவதே தனது நோக்கமென விருப்பு வாக்கில் கொழும்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட ஹிருணிகா பிரேமசந்திர நியுஸ்பெஸ்டிற்கு தெரிவித்தார்.

[quote]இது எனது வெற்றியைவிட நியாயத்திற்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகின்றேன். எனது தந்தையின் மறைவின் பின்னரே மக்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டனர். மக்களுக்கு குண்டூசிகளை பகிர்ந்து ஏமாற்றும் அரசியலை நான் ஆரம்பிக்கவில்லை. எனது தந்தை மீது கொண்டிருந்த அன்பின் காரணமாகவே எனக்கு ஒவ்வொரு வாக்கும் கிடைத்தன. கொலன்னாவையில் இன்று ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலமையை நீங்கள் காண்பீர்கள். எனவே கொலன்னாவ தொகுதியை கட்டியெழுப்பும் பொறுப்பு எனக்கு உள்ளது. கொழும்பு வாழ் மக்களுக்காக சட்டபூர்வமாக என்னால் செய்ய முடியுமான அனைத்தையும் செய்வேன். அது எனது பொறுப்பாகும். எவ்வளவு வீதிகளையும், எவ்வளவு கட்டங்களை அமைத்தாலும் பலன் இல்லை. எமக்கு கொள்கை ரீதியான ஒரு மாற்றம் அவசியமாகும். அவர்களுக்கு தலைமைத்துவம் வழங்கி சமூக, சமயம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன் நிற்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கமாகும்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்