காலியில் ஷான் விஜேலால் டி சில்வா முதலிடம்; மாத்தறையில் ஜனநாயக கட்சிக்கு ஒரு ஆசனம்

காலியில் ஷான் விஜேலால் டி சில்வா முதலிடம்; மாத்தறையில் ஜனநாயக கட்சிக்கு ஒரு ஆசனம்

காலியில் ஷான் விஜேலால் டி சில்வா முதலிடம்; மாத்தறையில் ஜனநாயக கட்சிக்கு ஒரு ஆசனம்

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 4:39 pm

தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ஷான் விஜேலால் டி சில்வா 95,860 வாக்குகளைப் பெற்று முதலிடத்திலுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பசந்த யாப்பா அபேவர்தன அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அவர் 76, 870 விருப்பு வாக்குளைப் பெற்று முன்னிலை வகிப்பதுடன், சந்திம ராசபுத்திர 70,509 வாக்குளைப் பெற்று இரண்டாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

47,90 வாக்குகளைப் பெற்ற சரத் யாப்பா அபேவர்தன மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளதுடன் 6,690 விருப்பு வாக்குளைப் பெற்றுக்கொண்ட ரஞ்சித் முனசிங்க தெரிவாகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்