களுத்தறையில் செனல் வெல்கமவிற்கு அதிக விருப்பு வாக்குகள்

களுத்தறையில் செனல் வெல்கமவிற்கு அதிக விருப்பு வாக்குகள்

களுத்தறையில் செனல் வெல்கமவிற்கு அதிக விருப்பு வாக்குகள்

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 2:32 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற ஆறு மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மேல் மாகாண சபைக்கு களுத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட செனல் வெல்கம 1,15,385  விருப்பு வாக்குளைப் பெற்று முதலாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களுத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 27 ஆயிரத்து 930 விருப்பு வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்டவர்களுள் ஜினதாஸ கித்துல்கொட 6 ஆயிரத்து 173 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மேல் மாகாண சபைக்காக ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவீந்ர யஸஸ் 12,885 வாக்குகளைப் பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்