கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்கவிற்கு அதிக விருப்பு வாக்குகள்

கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்கவிற்கு அதிக விருப்பு வாக்குகள்

கம்பஹாவில் பிரசன்ன ரணதுங்கவிற்கு அதிக விருப்பு வாக்குகள்

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 2:18 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற ஆறு மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில், கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பிரசன்ன ரணதுங்க, ,249,678 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்திலுள்ளார்.

கூட்டமைபின் நிமல் லன்சா 1,06,661 விருப்பு வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும்,  சஹன் பிரதீப் 59,892 விருப்பு வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹர்ஷன ராஜகருணா கம்பஹா மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

அவருக்கு 51 ஆயிரத்து 18 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காவிந்த ஹேஷான் 41,654 விருப்பு வாக்குகளைப் பெற்று மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட எட்வட் குணசேகர 29,944 விருப்பு வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சுசார தினால் 37,598 விருப்பு வாக்குகளைப் பெற்று இம்முறை தேர்தலில் வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்