ஏப்ரல் 4 வரை ஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை

ஏப்ரல் 4 வரை ஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை

ஏப்ரல் 4 வரை ஊர்வலங்கள், பேரணிகளுக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 10:00 am

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் குறைவாகவே பதிவாகியுள்ளதென பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியிலும் அமைதி நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறுகின்றார்.

தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் எவ்வித பாரதூரமான சம்பவங்கள் பதிவாகவில்லை எனவும், சிறியளவிலான சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

தேர்தல் நிறைவடைந்து ஒருவார காலம் தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியாக கருதப்படுவதுடன், ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி வரை எவ்வித வாகன பேரணிகளையோ ஊர்வலங்களையோ நடத்த முடியாது  என அவர் கூறுகின்றார்.

இவ்வாறு செயற்படுவபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸ் நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதுடன், நீதி மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, தேர்தலுக்கு பின்னரான காலப் பகுதியில் அமைதி நிலவுவதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு மாகாணங்களிலும் எவ்வித வன்முறைச் சம்பவங்களும் இதுவரையில் பதிவாகவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி கூறுகின்றார்.

ஒருவார காலத்திற்கு மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் இதுவரையில் எவ்வித பாரதூரமான வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என கெஃபெ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிடுகின்றார்.

தேர்தல் நடைபெற்ற இரண்டு மாகாணங்களிலும் அமைதியான சூழல் நிலவுவதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவிக்கின்றது.

இவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்திய தேர்தல்கள் ஆணையாளர், அரசியற் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாக, நிலையத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிச்சந்திர கூறுகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்