இலங்கைக்கு இறுதி வாய்ப்பு ; தலைவிதியை தீர்மானிக்கும் போட்டியில் தலைவர் மாலிங்க

இலங்கைக்கு இறுதி வாய்ப்பு ; தலைவிதியை தீர்மானிக்கும் போட்டியில் தலைவர் மாலிங்க

இலங்கைக்கு இறுதி வாய்ப்பு ; தலைவிதியை தீர்மானிக்கும் போட்டியில் தலைவர் மாலிங்க

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 1:02 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் தீர்மானமிக்க போட்டியொன்றில்  இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

குழு ஒன்றில் இருந்து ஏற்கனவே தென்னாபிரிக்க அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில்,. இந்தப் போட்டி இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.

சிட்டக்கொங்கில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் நாணய சுழற்சி மற்றும் பனியுடனான வானிலை  போன்ற விடயங்கள்  இன்றைய போட்டியின் முடிவில் தாக்கத்தை செலுத்தலாம் என கிரிக்கெட் விற்பன்னர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போட்டித் தடை காரணமாக இருபதுக்கு-20 போட்டிகளுக்கான அணித் தலைவர் தினேஷ் சந்திமால் இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், உப தலைவர் லசித் மாலிங்க இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.

இதேவேளை குழு ஒன்றிற்கான மற்றுமொரு போட்டியில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன.

எனினும் இந்த இரண்டு அணிகளும் அரைறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்