இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

இந்தியா அபார வெற்றி

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 5:57 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 73 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.

மீர்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

160 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  அவுஸ்திரேலிய அணி 16.2 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவுசெய்யப்பட்டார்.

ஏற்கனவே இந்திய அணி அரைறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ் அணிகள் அந்த வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்