அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 6:08 pm

மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது.

பி குழுவிற்கான போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டதன் மூலம் இங்கிலாந்து அணி இந்த வாய்ப்பினை பெற்றுக்கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 85 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

86 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை எட்டியது.

இதன்பிரகாரம் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் அரைறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்