வட்டரெக்க திறந்த வெலி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்

வட்டரெக்க திறந்த வெலி சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 3:38 pm

பாதுக்க வட்டரெக்க திறந்த வெலி சிறைச்சாலை பாடசாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதிகள், இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.

சிறைச்சாலை கைதிகள் வைத்தியசாலையின் பாதுகாப்பு வேலி கம்பிகளை வெட்டி அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

அம்பேபுஸ்ஸ தடுப்பு நிலையத்திலிருந்து வட்டரெக்க சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 6 கைதிகளே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

அவர்களை கைதுசெய்ய பொலிஸாரின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்