பேருவளையில் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்

பேருவளையில் கட்சி ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 9:03 pm

பேருவளை பகுதியில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 15 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருவளை தீனகொடை பிரதேசத்தில் நேற்று மாலை வேட்பாளர் ஒருவரின் வீட்டுக்கருகில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோதலை கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் குறித்த இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.

குறித்த மோதலில் மூவர் காயமடைந்துள்ளதுடன், 2 வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 15 பேர் வரையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜீத் ரோஹன தெரிவித்தார்.

சந்தேக நபர்களை இன்று களுத்துறை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்