தாய்நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு இது சிறந்த பதிலடி -ஜனாதிபதி

தாய்நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளுக்கு இது சிறந்த பதிலடி -ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 8:35 pm

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு கிடைத்த பாரிய வெற்றியானது , பொதுமக்களுக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் வழங்கிய சிறந்த சான்று என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டுக்கு எதிராக  செயற்படும் சக்திகளுக்கு இது சிறந்த பதிலடி என ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டபட்படுள்ளது.

எந்தவொரு சக்திக்கும் நாட்டின்  தேவைகளை தோல்வி அடைய   செய்ய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு மக்கள் இடமளிக்க போவதில்லை என்பதனை இந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் ஜனாதிபதி தனது அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார்.

அனைத்து விடயங்களை விடவும் நாட்டு மக்களின் விருப்பம் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி , மக்களினதும் நாட்டினதும் தேவைகளை தோல்வியடைய செய்வதற்கு  எதிர்காலத்தில் எவருக்கும் இடமளிக்க போவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்