சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக தாய்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக தாய்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக தாய்லாந்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 7:48 pm

சீனாவுடனான சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தமொன்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்வான் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வர்த்தக உடன்படிக்கையின் மூலம் தமது நாட்டின் பொருளாதாரம் சீனாவிடம் தங்கியிருக்கும் நிலைக்கு செல்லும் என  மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதன் காரணமாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தலைநகர் தாய்பேயில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்..

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் தாய்வானில் அனைத்து சந்தைகளிலும் எவ்வித கட்டுப்பாட்டுகளின்றி முதலீடு செய்ய முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உள்நாட்டின் சிறிய  தொழிற்துறைகளையும்  தொழில் வாய்ப்புகளையும் பாதிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில்’ ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்..

வர்த்தக ஒப்பந்தமானது 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைச்சாத்திடப்பட்ட போதிலும்  அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களால் இது அங்கீகரிக்கப்படவில்லை  என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்