இரண்டு மாவட்டங்களின் விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன

இரண்டு மாவட்டங்களின் விருப்பு வாக்குகள் வெளியாகியுள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 7:30 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் வேட்பாளர்கள் பலர் பெற்றுள்ள விருப்பு வாக்குகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட பசந்த யாப்பா அபேவர்தன மாவட்டத்தில் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் 76 ஆயிரத்து 870 வாக்குகளை பெற்று மாத்தறை மாவட்டத்தில் முதலிடத்திலுள்ளார்.

70 ஆயிரத்து 509 வாக்குகளை பெற்று சந்திம ராசபுத்திர மாத்தறை மாவட்டத்தில் இரண்டாம் இடத்திலுள்ளார்.

மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பி்ல் போட்டியிட்ட சரத் யாப்பா 47 ஆயிரத்து 90 வாக்குகளை பெற்று மாவட்டத்தில் மூன்றாவது இடத்திலுள்ளார்.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சத்துர கலப்பத்தி 27 ஆயிரத்து 930 வாக்குகளை பெற்று, அந்த கட்சி சார்பில் முதலிடத்தில் உள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அதிகபடியான விருப்பு வாக்குகளை ஜினதாச கித்துலேகொட பெற்றுக் கொண்டுள்ளார்.

அவர் ஆறாயிரத்து 173 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ரஞ்சித் முனசிங்க ஆராயிரத்து 690 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில்  போட்டியிட்ட டீ.வீ. உபுல் 64 ஆயிரத்து 995 விருப்பு வாக்குகளை பெற்று மாவட்டத்தில் முதலிடத்திலுள்ளார்.

எம்.கே. கசுன், 55 ஆயிரத்து 881 விருப்பு வாக்குகளை பெற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில்  போட்டியிட்ட அஜித் ராஜபக்ஸ 34 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகூடிய 28 ஆயிரத்து 825 விருப்பு வாக்குகளை தென்னக்கோன் நிலமே பெற்றுள்ளார்.

இந்த கட்சியின் நிமல் லால் சந்த 17 ஆயிரத்து 199 விருப்பு வாக்குகளையும், நிஹால் வெதஆராச்சி 13 ஆயிரத்து 593 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி சார்பில் நிஹால் கலப்பதி முதலிடத்தில் உள்ளதுடன், அவர் 19 ஆயிரத்து 957 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்