அஹமட் ஷெஸாட்; வெற்றி பாகிஸ்தான் வசம்

அஹமட் ஷெஸாட்; வெற்றி பாகிஸ்தான் வசம்

அஹமட் ஷெஸாட்; வெற்றி பாகிஸ்தான் வசம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 9:25 pm

உலக இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 10 சுற்றில் குழு இரண்டிற்கான  இன்றைய போட்டியொன்றில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை 50 ஓட்டங்களால் வெற்றி கொண்டது

மிர்பூரில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்தது

இதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

பாகிஸ்தான் சார்பாக அஹமட் ஷெஸாட் அதிரடியாக  111 ஓட்டங்களை  ஆட்டமிழக்காமல்  குவித்தார்

191 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது

பாகிஸ்தான் சார்பாக உமர் குல் 3 விக்கட்டுக்களையும் சயீட் அஜ்மல் 2 விக்கட்டுக்களையும்’ கைப்பற்றினர்

ஆட்டநாயகனாக அஹமட் ஷெஸாட் தெரிவானார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்