அரசாங்கத்தை கவிழ்த்து அரசாங்கமொன்றை நாம் உருவாக்குவோம் – அனுர குமார

அரசாங்கத்தை கவிழ்த்து அரசாங்கமொன்றை நாம் உருவாக்குவோம் – அனுர குமார

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 8:49 pm

மகாண சபை தேர்தல் முடிவுகள் தொடர்பில் பிரதான அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் இவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து :-

“மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு மக்கள் மீண்டும் ஒரு தடவை ஆதரவு வழங்கியுள்ளார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு எதிராக முனனெடுத்த பொய்ப்பிரசாரங்கள் மற்றும் குற்றச்சாட்டுக்களை மக்கள் நிராகரித்துள்ளார்கள். மேற்க்த்தேய வாதிகள் மற்றும் அவர்களின் பின்னணியில் உள்ள ஈழம்வாதிகளின் தேவையை நிறைவேற்றி நாட்டை அசௌகரியப்படுத்துவதற்கு ஜெனீவாவில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மக்கள் அவர்களின் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே இந்த தேர்தல் முடிவுகள் தேசிய ரீதியில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.”

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்த கருத்து :-

“இந்த அரசாங்கம் முன்னெடுக்கின்ற மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க மக்கள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இந்த தேர்தலின் ஊடாக இந்த நாட்டில் அரசியல் திருப்பு முனை ஒன்றை மக்கள் விடுதலை முன்னணி பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நாட்டில் புதிய அரசியல் மாற்றம் அரசியல் கலாசாரத்திற்காக இந்த 2 இலட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் எமக்கு அளிக்கப்பட்டுள்ளன.  இந்த அரசாங்கத்தை கவிழ்த்து மக்களுக்கு சேவை செய்கின்ற மக்கள் மயப்படுத்தப்படட அரசாங்கமொன்றை நாம் உருவாக்குவோம். அந்த நடவடிக்கைக்கு தேவையான சக்தி இந்த மாகாண சபையின் ஊடாக எமக்கு கிடைத்துள்ளது.”

ஐ.தே.க தவிசாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்த கருத்து :-

“ஆளும் கட்சியாக எமது கட்சியை  மாற்றுவதற்கு தேவையான சக்தியை வாக்களர்கள் எமககு வழங்கியுள்ளனர். எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும். புதிய வேலைத்திட்டங்கள், கொள்கைத் திட்டங்கள், என்பன நாட்டுக்கு வெளிப்படத்தப்பட வேணடும் என்பது இந்த சந்தர்பபத்தில் உறுதிப்படுத்தப்படுகினறன.  எமது கட்சியில் கீழ் மட்டத்தில் உள்ள உறுப்பினர் மறுசீரமைக்கபபட வேண்டும் என்பதும் எமக்கு உணர்த்தப்படுகின்றது. அத்தோடு வாக்கு கட்டமைப்பு ஒரே நிலையில் இருக்குமாயின் இதனூடாக புதிய வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட வேண்டும். எமது வேடபாளர்களை கௌரவிக்கும் வகையில் எதிர்காலத்தில் இவை முன்னெடுக்கப்பட வேணடும் என்று நான் நம்புகின்றேன்.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்