வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 9:18 am

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் பொருட்டு வாக்குப் பெட்டிகளும், வாக்குச் சீட்டுகளும் இன்று காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

நான்காயிரத்து 253 நிலையங்களில் இம்முறை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார்.

58 இலட்சத்து 98 ஆயிரத்து 427 பேர் இரண்டு மாகாண சபைகளுக்குமான தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

இதேவேளை, 608 வாக்கெண்ணும் நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிடுகின்றார்.

இவற்றுள் மேல் மாகாணத்தில் 420 நிலையங்களிலும், தென் மாகாணத்தில் 188 நிலையங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்