மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 9:03 am

நாளை நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலை முன்னிட்டு மேல் மற்றும் தென் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சுகள் குறிப்பிடுகின்றன.

வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்தப்படுவதே இதற்கு காரணமாகும்.

இன்றைய தினம் வழங்கப்படும் விடுமுறைக்குப் பதிலாக வேறொரு  விடுமுறை நாளில் பாடசாலை கல்வி செயற்படுகளை மேற்கொள்ளுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தல் வாக்கெண்ணும்  நிலையங்களாக தேர்தெடுக்கப்பட்டுள்ள பாடசாலைகள், கல்யியற் கல்லூரிகள் ஆகியவற்றிற்கு நேற்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்