மாத்தறையில் உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கடமைக்கு இடையூறு

மாத்தறையில் உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கடமைக்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 3:18 pm

மாத்தறையில் உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இந்த விசாரணைகளுக்காக தேர்தல்கள் செயலகத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்றை மாத்தறைக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் நியூஸ் பெர்ஸ்டுக்கு தெரிவித்தார்.

மாத்தறை கடற்கரை வீதியில் பொருத்தப்பட்டிருந்த வேட்பாளர் ஒருவரின் பிரசார பதாகைகளை அகற்றுவதற்கு சென்ற சந்தர்ப்பத்தில், விசாரணை அதிகாரிகளின் கடமைக்கு சிலர் இடையூறு விளைவித்துள்ளதுடன் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்