மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 7:21 pm

மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான ஒழுங்குகளை பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இரண்டாயிரம் உறுப்பினர்களை ஈடுபடுத்தவுள்ளதாக பெவ்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காக 24 மணித்தியாலமும் இயங்கும் விசேட பிரிவொன்றையும் ஸ்தாபித்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கெஃபே அமைப்பின் 800 க்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் நாளை வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவுள்ளனர்.

மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள ஆறு மாவட்டங்களுக்கும் தமது கண்காணிப்பாளர்களை அனுப்பிவைத்துள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்