மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்தின் மற்றுமொரு பகுதிக்கு மாற்றம்

மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்தின் மற்றுமொரு பகுதிக்கு மாற்றம்

மலேஷிய விமானத்தை தேடும் பணிகள் இந்து சமுத்திரத்தின் மற்றுமொரு பகுதிக்கு மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 3:43 pm

விபத்துக்குள்ளானதாக கூறப்படும் மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கைகள் இந்து சமுத்திரத்தின் மற்றுமொறு பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்து சமுத்திரத்தின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்திலிருந்து ஆயிரத்து 100 கிலோ மீற்றர் பகுதியில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்மதிகளில் காண்பிக்கப்படும் நிழற்படங்கள் சுட்டிக்காட்டியவாறு  எம். எச் 370  விமானம் வேகமாக சென்றதாக கூறப்படும் கடற்பகுதிகளிலேயே இ்ந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கு முன்னர் செய்மதிகளில் காண்பிக்கப்பட்டவாறு தென்பகுதியிலேயே தேடும் பணிகள் இடம்பெற்றன

எனினும் எவ்வித தடயங்களும் இல்லாத காரணத்தினால் தற்போது புதிய திசையில் விமானத்தை தேடும் பணிகள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்