தேர்தல் கடமைகளில் 26 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளில் 26 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளில் 26 ஆயிரம் பொலிஸார்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 10:24 am

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளின் பொருட்டு 26 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

பாதுகாப்பு நிமித்தம் வாக்குச் சாவடிகளுக்கு அருகில் துப்பாக்கியுடன் இரண்டு பொலிஸார் வீதம் இன்று முதல் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான வாக்ளிப்பு நிலையங்களில் நாளை முதல் பெண் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர்களிடம் வாக்குகளுக்காக மன்றாடுதல், வாக்காளர்களை வற்புறுத்தி வாகனங்களில் ஏற்றிச் செல்லல் என்வற்றை தடுப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு அருகிலும் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அருகிலுமாக மூன்று கட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தேர்தல் சட்டங்களை மீறுவோர் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான உரிய ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்