English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
28 Mar, 2014 | 7:29 pm
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 93 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்களுடைய 22 படகுகளும் விடுவிக்கப்பட்டதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டிருந்த குறித்த 93 மீனவர்களும் இன்று யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விடுத்த பணிப்புரைக்கு அமைய இதற்கான ஒழுங்குகளை கடற்றொழில் திணைக்களம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
இதேவேளை, கடந்த மூன்று மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 14 மீன்பிடிப் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த படகுகளை பொறுப்பேற்பதற்காக தமிழகத்தின் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் இருந்து 54 மீனவர்கள் இலங்கையை நோக்கி புறப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்களை பொறுப்பேற்றுள்ளதாக யாழ். இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இவர்களை நாளை அல்லது நாளை மறுதினம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க எண்ணியுள்ளதாக யாழ் இந்திய துணைத் தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி குறிப்பிட்டார்.
11 Feb, 2021 | 02:49 PM
20 Jan, 2021 | 06:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS