ஜெனீவா மனித உரிமை பிரேரணையை ஜனாதிபதி நிராகரிப்பு

ஜெனீவா மனித உரிமை பிரேரணையை ஜனாதிபதி நிராகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 5:03 pm

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை நிராகரித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கைக்கே தனித்துவமான நல்லிணக்க செயற்பாட்டை கட்டியெழுப்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்த பிரேரணை பொருத்தமற்றதாகும் என்பதுடன், அதன் மூலம் எந்த விதமான நன்மைகளும் கிட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் இதன் ஊடாக அதைரியம் அடையப்போவதில்லை எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தாம் ஆரம்பித்துள்ள நல்லிணக்க செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்