சிறிய மீன்பிடி படகுரிமையாளர்களுக்கு மானிய உதவி வழங்க தீர்மானம்

சிறிய மீன்பிடி படகுரிமையாளர்களுக்கு மானிய உதவி வழங்க தீர்மானம்

சிறிய மீன்பிடி படகுரிமையாளர்களுக்கு மானிய உதவி வழங்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 10:02 am

சிறிய மீன்பிடி படகுரிமையாளர்களுக்கு மண்ணெண்ணெய் மானிய உதவி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவிக்கின்றார்.

இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையிலேயே இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநாவசிய பிரச்சினைகள் தோன்றாத வகையில், உரியவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

மண்ணெண்ணெய் மானிய உதவி கோரி மீனவர்கள் போராட்டம் நடத்த ஆயத்தமான நிலையில் இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்