அலெக்ஸ் அதிரடி; வெற்றி இங்கிலாந்து வசம்

அலெக்ஸ் அதிரடி; வெற்றி இங்கிலாந்து வசம்

அலெக்ஸ் அதிரடி; வெற்றி இங்கிலாந்து வசம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 10:51 am

ஐந்தாவது உலகக் கிண்ண இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரின் சுப்பர் டென் சுற்றில் இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்றைய போட்டியில் இலங்கை அணி தனது முதல் தோல்வியை சந்தித்தது.

சிட்டகொங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை  நிர்ணயித்த 190 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே இரண்டு விக்கட்டுக்களை இழந்து தடுமாற்றத்தை எதிர்கொண்டபோதிலும் பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் இயன் மோர்கன் ஆகி|யோர் மூன்றாம் விக்கட்டுக்காக 152 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.

இம்முறை உலக இருபதுக்கு- 20 கிரிக்கெட் தொடரில் சதமடித்த முதல் வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் வரலாறு படைத்தார்.

அலெக்ஸ் ஹேல்ஸ் 6 சிக்ஸர்கள் 1 பௌண்டரிகளுடன் 116 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல்  பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

இயன்மோர்கன் 38 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் நுவக் குலசேகர 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணி 4 பந்துகள் மீதமிருக்க 6 விக்கட்டுக்களால் வெற்றியை தன்வசப்படுத்தியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மஹேல ஜயவர்தனவின் 89 ஓட்டங்களின்  உதவியுடன் 20 ஓவர்களில் 189 ஓட்டங்களைப் பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்