வேட்பாளர்களின் பெயர் பட்டியலை விநியோகிக்க விசேட திட்டம்

வேட்பாளர்களின் பெயர் பட்டியலை விநியோகிக்க விசேட திட்டம்

வேட்பாளர்களின் பெயர் பட்டியலை விநியோகிக்க விசேட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 8:27 am

மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியலை  விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை இன்று முன்னெடுக்கவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, மாகாண சபை தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டடைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்நதுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தங்கள் பகுதியிலுள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தபால் மாஅதிபர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்