வில்லனாகும் 7 வயது சிறுவன்

வில்லனாகும் 7 வயது சிறுவன்

வில்லனாகும் 7 வயது சிறுவன்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 5:27 pm

கிரீடம் படத்தை கொடுத்த ஏ.எல்.விஜய் தாண்டவம், தலைவா படத்திற்கு பிறகு சைவம் என்ற படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.

இப்படத்தில் தெய்வதிருமகள் படத்தில் நடித்த குழந்தை சாரா, நாசர் மற்றும் நாசர் மகன் பாஷா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

திங்க் பிக் ஸ்டுடியோஸ் என்ற ஏ.எல்.விஜய்யின் முதல் தயாரிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்திற்கும அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சைவம் படத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விடயம் உள்ளது, இப்படத்தில் வரும் வில்லனுக்கு 7 வயது. ஆனால் அவர் நடித்த காட்சி காட்சிகள் இயக்குனர் விஜய்யை மிகவும் ஈர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

7 வயதில் நாம் எப்படி இருந்திருப்போம், ஆனால் இச்சிறுவன் இந்த வயதில் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் மட்டுமல்லாமல் இப்படம் வெளிவந்த பின் நீங்களும் இச்சிறுவனை பற்றி பேசுவீர்கள் என்கிறார் ஏ.எல்.விஜய்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்