யாழில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

யாழில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 10:11 am

யாழில் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக் கோட்டையில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பினை  அடுத்து, சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைகளுக்குட்படுத்தபடுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்