மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான விசாரணைகளை நம்பமுடியாது

மனித உரிமைகள் ஆணையாளர் தலைமையிலான விசாரணைகளை நம்பமுடியாது

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 8:50 pm

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகள் குறித்து எந்தவிதத்திலும் நம்பிக்கைக்கொள்ள முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிக்கின்றார்.

இலங்கை தொடர்பான பிரேரணை எதிர்வரும் 27 ஆம் திகதி கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக, மனித உரிமைகள் தொடர்பில், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக மனித உரிமைகள் மாநாட்டில் கலந்து கொண்டு நாட்டை வந்தடைந்த அமைச்சர் மஹிந் சமரசிங்க இந்த விடயத்தினை நியுஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25ஆவது அமர்வு தற்போது  சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகின்றது.

அமெரிக்க உள்ளிட்ட முக்கிய ஐந்து நாடுகள் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரேரணைகளை முன்வைத்துள்ளன.

இதில் இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை முன்வைக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக அமைகின்றது.

இந்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தலைமைத்துவம் வழங்க வேண்டும் என்பதும் அந்த பிரேரணையில் உள்ளக்கடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்