யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நியூஸ்பெஸ்ட்டின் கட்டட நிர்மாண ஆலோசனை சேவை நிறைவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நியூஸ்பெஸ்ட்டின் கட்டட நிர்மாண ஆலோசனை சேவை நிறைவு

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 8:43 pm

நியூஸ்பெஸ்ட் மற்றும் எஸ்லோன் ஏற்பாட்டில் யாழ். மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கட்டட நிர்மாண ஆலோசனை சேவை நிறைவடைந்துள்ளது.

நேற்று ஆரம்பமான இலவச ஆலோசனை சேவையில் இன்று மாலை வரை இடம்பெற்றது.

இந்த ஆலோசனை சேவையின் ஒரு கட்டமாக யாழ். மாவட்டத்தில் ஊடகத்துறையில் ஆர்வமுடையவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் ஏற்பாடு செய்த திரைப்பரீட்சை மற்றும் குரல் தேர்வுகளும் இடம்பெற்றன.

வானொலி செய்தி வாசிப்பாளர்களுக்கான குரல் தேர்வுக்கு பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

அவர்களிலிருந்து கௌதமி நந்தபாலா வானொலி செய்தி வாசிப்பாளருக்கான குரல் தேர்வில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை, திரைப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட குமாரலிங்கம் சாம்பவிக்கு சக்தி ரீ.வியின் நியூஸ்பெஸ்ட் மணித்தியால செய்தியினை வாசிப்பதற்கான சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீ்ட்டு நிர்மாணத்தில் ஈடுபடுபவர்களுக்கு துறைசார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நியூஸ்பெஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கட்டட நிர்மாண ஆலோசனை சேவையில் யாழ். குடாநாட்டை சேர்ந்த பெருந்திரளானோர் பங்கேற்று பலன் பெற்றுக் கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்