தேர்தல் பிரசார குறுந்தகவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

தேர்தல் பிரசார குறுந்தகவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

தேர்தல் பிரசார குறுந்தகவல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 11:25 am

தொலைப்பேசிகளூடாக தேர்தல் பிரசாரம் தொடர்பில் குறுந்தகவல்கள் அனுப்பும் செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தொலைத் தொடர்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளரால் சட்டவிரோத பிரசாரம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக   தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷா பலப்பிட்ட தெரிவித்தார்.

இந்த வியடம் தொடர்பில் கையடக்க மற்றும் நிலையான தொலைப்பேசிகளை விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தனிப்பட்ட ரீதியில் குறுந்தகவல் ஊடாக தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது எனவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்