தேயிலை தொழிற்சாலையில் பரவியத் தீ கட்டுப்பாட்டில்

தேயிலை தொழிற்சாலையில் பரவியத் தீ கட்டுப்பாட்டில்

தேயிலை தொழிற்சாலையில் பரவியத் தீ கட்டுப்பாட்டில்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 9:29 am

பூண்டுலோயா சொய்சி தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மூடப்பட்டிருந்த தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை தீ பரவியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பற்றைக்காட்டில் ஏற்பட்ட தீ தொழிற்சாலை கட்டடத்திற்கும் தீ பரவியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சுமார் 20 ஏக்கர் காட்டு பகுதி தீ காரணமான முற்றிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் தீயால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை கணிப்பீடு செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்