தேயிலை தொழிற்சாலையில் தீ; இருவருக்கு விளக்கமறியல்

தேயிலை தொழிற்சாலையில் தீ; இருவருக்கு விளக்கமறியல்

தேயிலை தொழிற்சாலையில் தீ; இருவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 8:17 pm

பூண்டுலோயா சொய்சி தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாவலப்பிட்டி நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை ஒரு வார காலத்திற்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து  சந்தேகநபர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூடப்பட்டிருந்த தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பற்றைக்காட்டில் ஏற்பட்ட தீ, தொழிற்சாலை கட்டடத்திற்கும் பரவியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்