சீன செயற்கைக்கோளின் புதிய படம்; காணாமல் போன விமானத்தின் பாகமா?

சீன செயற்கைக்கோளின் புதிய படம்; காணாமல் போன விமானத்தின் பாகமா?

சீன செயற்கைக்கோளின் புதிய படம்; காணாமல் போன விமானத்தின் பாகமா?

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 7:22 am

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் புகைப்படம் ஒன்றை சீன செயற்கைக்கோள் படம்பிடித்து அனுப்பியுள்ளது.

குறித்த படம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
இதனையடுத்து அப்பகுதிக்கு 2 கப்பல்களை சீனா அனுப்பவுள்ளது.

இந்தப் பொருள் 22 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்டதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மலேசியத் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹுசைன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மலேசியத் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ஹிசாமுதீன் ஹுசைன் தெரிவித்த கருத்து –

இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மிதக்கும் மிகப்பெரிய பொருள் ஒன்றை சீன செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது. மலேஷியாவுக்கான சீனா உயர்ஸ்தானிகர் இந்த புகைப்படம் தொடர்பான தகவல்களை தெரிவித்தார்.

இதனையடுத்து அந்தப் பொருளை ஆராய்வதற்காக அப்பகுதிக்கு சீனா கப்பல்களை அனுப்பவுள்ளது. காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தங்கள் வான்பகுதி வழியாக செல்லவில்லை என்று இந்தியா, கம்போடியா மற்றும் கஸகஸ்தான் நாடுகள் தெரிவித்துள்ளன என்று ஹிசாமுதீன் ஹுசைன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்