சிலியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

சிலியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

சிலியில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 10:55 am

சர்வதேச நாடுகளில் அரசாங்கத்திற்கு எதிரான  ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வழமையான நிகழ்வொன்றாகியுள்ளது.

ஆர்ப்பாட்டங்களினால் பல நாட்டின் ஜனாதிபதிகளும் பதவி கவிழ்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் சிலியிலும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்ததங்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி மிச்செல் பச்லெட் தனது தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்திருந்தார்.

எனினும் வாக்குறுதிகளை மறந்துள்ள ஜனாதிபதிக்கு அவற்றை நினைவுகூறுவதற்கே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

மாறாக ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை  எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்