சர்வதேச கண்கானிப்பளர்கள் க்ரைமியாவை நெருங்கக்கூடாது – ரஷ்யா எச்சரிக்கை

சர்வதேச கண்கானிப்பளர்கள் க்ரைமியாவை நெருங்கக்கூடாது – ரஷ்யா எச்சரிக்கை

சர்வதேச கண்கானிப்பளர்கள் க்ரைமியாவை நெருங்கக்கூடாது – ரஷ்யா எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 10:26 am

உக்ரைனில் தொடரும் அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் உக்ரைனை சென்றடைந்துள்ளனர்.

இதற்காக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பின் 57 அதிகாரிகள் யுக்ரேனை சென்றடைந்துள்ளனர்.

உக்ரைன் கோரிக்கைக்கு அமைய மோதல்கள் அதிகம் இடம்பெறும் தென்கிழக்கு பகுதிகளுக்கே இவர்கள் அனுப்பபட்டுள்ளனர்.

இந்நிலையில் வன்முறைகள் தொடரும் நாட்டின் மேற்கு  பகுதிக்கும் கண்காணிப்பாளர்களை அனுப்புமாறு ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

எனினும் தமது கட்டுப்பாட்டிலுள்ள க்ரைமியாவில் குறித்த கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்க கூடாது எனவும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதனையடுத்து உக்ரைனின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சுமார் 6 மாதங்கள் இந்த கண்காணிப்பாளர்கள்  தமது கடமையில் ஈடுபட்டிருப்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனடிய பிரதமர் மற்றும் ஜேர்மனிய வெளிவிகார அமைச்சர் ஆகியோர் உக்ரைன்  அரசியல் தலைவர்களை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்