கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வி, கலைப் பீடங்கள் மூடப்பட்டுள்ளன

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வி, கலைப் பீடங்கள் மூடப்பட்டுள்ளன

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வி, கலைப் பீடங்கள் மூடப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 8:09 pm

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் கலை பீடங்கள் கால வரையரையின்றி மூடப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதி மற்றும் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து குறித்த பீடங்களை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் நாளை காலை எட்டு மணிக்கு முன்பதாக வெளியேற வேண்டும் என பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி குமார ஹிரும்புரேகம தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே உபவேந்தர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய மாணவர்களை விடுதிகளுக்கு அனுமதிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இன்று முற்பகல் இடம்பெற்ற முறுகல் நிலையினை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக விடுதிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்புப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி  குமார ஹிரும்புரேகம தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்