இலகு வெற்றி இந்தியா வசம்

இலகு வெற்றி இந்தியா வசம்

இலகு வெற்றி இந்தியா வசம்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 10:26 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடரில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்படுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

கிரிஸ் கெய்ல் மாத்திரமே குறிப்பிடத்தக்க 34 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.  இந்திய பந்துவீச்சில் ரவிந்திர ஜடேஜா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

130 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  19.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களையும் மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

ரோஹித் சர்மா 62 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 54 ஓட்டங்களையும்  பெற்றுக்கொடுத்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்