அக்மல் அதிரடி; வெற்றி பாகிஸ்தான் வசம்

அக்மல் அதிரடி; வெற்றி பாகிஸ்தான் வசம்

அக்மல் அதிரடி; வெற்றி பாகிஸ்தான் வசம்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 9:53 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 தொடரில் அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸதான் அணி 16 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட் இழப்பிற்கு 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் அணியின் உமர் அக்மல் 94 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

192 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி  20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்