வெற்றியை தனதாக்கியது இலங்கை

வெற்றியை தனதாக்கியது இலங்கை

வெற்றியை தனதாக்கியது இலங்கை

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 6:52 pm

உலக இருபதுக்கு- 20 தொடரின் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான  போட்டியில்      இலங்கை அணி 5 ஒட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

சிட்டங்கொங்கில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் இலங்கை அணி வெற்றியீட்டியது.

முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக குசல் ஜனித் பெரேரா  61 ஓட்டங்களை  பெற்றுக்கொண்டார்

166 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய  தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.

உலக இருபதுக்கு- 20 போட்டிகளில் நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி முதலாம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்