யாழ். வட்டுகோட்டையில் இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு

யாழ். வட்டுகோட்டையில் இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு

யாழ். வட்டுகோட்டையில் இராணுவத்தினரால் திடீர் சுற்றிவளைப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 7:10 pm

யாழ்ப்பாணம் – வட்டுகோட்டை பகுதியில் இராணுவத்தினரால் இன்று திடீர் சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது வட்டுக்கோட்டை பகுதியில் நூறுக்கும் அதிகமானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வீடுகள் பலவும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன்வணிகசூரிய நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை பகுதியில் சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்  தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் இந்த பகுதியில் காணப்படவில்லை எனவும், விசாரணைக்கு உட்படுத்திய எவரையும் தடுத்து வைக்கவோ கைது செய்யவோ இல்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக் காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்