மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 9:22 am

கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் மகாவலி ஆற்றிலிருந்து ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கட்டுகஸ்தோட்டை, நவயாலதென்ன ரயில் கடவைக்கு அருகில் மகாவலி ஆற்றிலிருந்து நேற்றிரவு 9 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

மரணமான நபரின் ஆடையில் இருந்து கண்டி மாநகர சபையின் அடையாள அட்டையொன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கண்டி மஹியாவை பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதுடன், உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை ஆகியன இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்