பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர் பணி இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 12:41 pm

கிரிஉல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒருவரை சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்களில் கிரிஉல்ல பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பபதிகாரியும் அடங்குகின்றார்.

கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பில், பொலிஸ் உயரதிகாரிகள் கவனத்திற்கு உட்படுத்தாமல் 30 நாட்கள் தடுத்து வைத்திருந்ததாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குளியாப்பிட்டி பிராந்தியத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரால் இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்