பூண்டுலோயா தேயிலை தொழிற்சாலையில் தீ

பூண்டுலோயா தேயிலை தொழிற்சாலையில் தீ

பூண்டுலோயா தேயிலை தொழிற்சாலையில் தீ

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 8:12 pm

பூண்டுலோயா கும்பல்ஒலுவ சொய்சி தோட்டத்திலுள்ள தேயிலை தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது.

மூடப்பட்டிருந்த தொழிற்சாலை ஒன்றிலே இன்று பிற்பகல் இரண்டு மணியளவில் தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிற்சாலைக்கு அருகிலுள்ள பற்றைக்காட்டில் ஏற்பட்ட தீயே, தொழிற்சாலை கட்டடத்திற்கும் பரவியிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த தொழிற்சாலைக்கு அருகில் மக்கள் குடியிருப்புகள் அதிகமாக காணப்படுவதால், குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்