பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 9:52 am

உலக இருபதுக்கு- 20  தொடரின் சுப்பர் டென் சுற்றின் முதல் போட்டியிலேயே  இந்தியா தனது  வெற்றியை பதிவு செய்தது.

பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி , விராட் கோஹ்லி மற்றும் ரெய்னாவின் சிறப்பான இணைப்பாட்டத்தின் உதவியுடன் 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

மிர்பூரில் நடைபெற்ற இந்தப்போட்டியில் 131 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18 தசம் 3 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 131 ஓட்டங்களை பெற்று பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஷிகர் தவான் 30 ஓட்டங்களுடனும்   ரோஹித் ஷர்மா 24 ஓட்டங்களுடனும் |ஆட்டமிழந்தனர்.

அதன் பின்னர் இணைந்த விராட் கோஹ்லி – ரெய்னா ஜோடி , ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

விராட் கோஹ்லி  36 ஓட்டங்களையும் சுரேஷ்  ரெய்னா 28 பந்துகளில் 35   ஓட்டங்களையும் பெற்றனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களையே பெற்றது.

துடுப்பாட்டத்தில் உமர் அக்மல் பெற்ற 33ஓட்டங்களே அணி சார்பில் பெற்றுக்கொண்ட அதிக பட்ச ஓட்டங்களாகும் .

போட்டியின் சிறப்பாட்டக்காரராக 2 விக்கட்டுக்களை வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவு செய்யப்பட்டார்.

இந்தியா தனது அடுத்த போட்டியில் நடப்பு சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியை நாளை சந்திக்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்