தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 108 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 108 பேர் கைது

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 108 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 9:11 am

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் இதுவரை கிடைத்துள்ள முறைபாடுகளுக்கமைய 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இரண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் 115 முறைபாடுகள் பொலிஸாருக்குப் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண ​தெரிவித்தார்.

தேர்தல் வன்முறைகள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலேயே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

மேலும் 34 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவற்றுள் மூன்று அரச வாகனங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் தொடர்பான சட்டங்கள் தொடர்ந்தும் பொலிஸாரால் அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின்வாங்கப் போவதில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தலுடன் தொடர்புடைய 20 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தமக்குப் பதிவாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதற்கு இடமளிக்காமை மற்றும் விளையாட்டு மைதானங்களை ஒதுக்கிக் கொடுக்காமை போன்ற காரணிகள் தொடர்பில் இந்த முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலவைர் கலாநிதி பிரதிபா மகாநாமஹேவா தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்